அஜித்தின் காதல் கோட்டை படத்திற்கு தேசிய விருது செய்தி கேட்டதும் மயங்கிய பிரபலம்- சுவாரஸ்ய தகவல்
காதல் கோட்டை
தமிழ் சினிமாவில் பஞ்சமே இல்லாமல் காதல் படங்கள் உள்ளன. பார்ப்போரின் நெஞ்சங்களை தாக்கும் வகையில் நிறைய வித்தியாசமான படங்கள் உள்ளன.
90களில் ரயில் காதல், பேருந்து காதல், சாதி மதம் கடந்த காதல், வயது வித்தியாசம் உள்ள காதல், அக்ரிமென்ட் காதல் என இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
அப்படி காதல் படங்களில் முற்றிலும் புதியதொரு பரிமாணத்தில் 1996ம் ஆண்டு வெளியான படம் தான் காதல் கோட்டை. அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி நடிப்பில் உருவான இப்படம் பார்க்காத காதல் படமாக அமைந்தது.
சுவாரஸ்ய தகவல்
தற்போது இந்த படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை இப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறியுள்ளார். அதில் அவர், காதல் கோட்டை படத்திற்காக இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்தது.
வேறுஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தவருக்கு போன் செய்தேன், என்ன செய்கிறீர்கள் என கேட்க, அதற்கு அவர், பிரகாஷ் ராஜ் வயதான கெட்டப் , அவருக்கு காட்சியை விலக்கிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
நான் உடனே உங்களுக்கு காதல் கோட்டை படத்திற்காக இந்தியாவின் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என்றேன், பின் அந்த பக்கம் சத்தமே இல்லை.
இந்த செய்தியை கேட்டதும் அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். பின் படப்பிடிப்பில் இருந்த பிரகாஷ் ராஜ் மற்றும் படக்குழுவினர் பதறி அவரை கேட்டபோது இந்த விஷயத்தை கூறியுள்ளார்.
அதைக்கேட்டதும் அனைவரும் இதற்காகவா மயக்கம் போட்டீர்கள் என கலாய்த்துள்ளனர்.

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?- சென்னையில் இப்படியொரு தொழில் செய்கிறாரா?

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
