அடுத்தடுத்து சூர்யாவின் மூன்று திரைப்படங்களை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ! மாஸ் தகவல்..
லோகேஷ் - சூர்யா கூட்டணி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக மாறியிருக்கிறார். அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இன்று இவர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். இதனால் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் முக்கிய வில்லனாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
இதற்கிடையே சூர்யா மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி விக்ரம் 3, இரும்புக் கை மாயாவி உள்ளிட்ட படங்களை தவிர மேலும் ஒரு திரைப்படம் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ளதாம்.
ஆம், மாநகரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் சூர்யாவிடம் வேறொரு கதையை சொல்லியிருந்தாராம், ஆனால் அப்படமும் உருவாகாமல் போய்விட்டது. இதனால் சூர்யா - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் மூன்று திரைப்படங்கள் வரும் காலங்களில் வரிசையாக உருவாகலாம் என கூறப்படுகிறது.

அட்லீ இயக்கும் சூப்பர் ஸ்டார் படத்தை நிராகரித்த நடிகை சமந்தா ! என்ன காரணம் தெரியுமா?
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri