தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படங்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் திரையுலக ரசிகர்கள் பலரும், அடுத்த பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த முன்னணி நட்சத்திரங்களின் பிரம்மாண்ட தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய தவறியுள்ளது.
வெளியாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படங்கள்
இந்நிலையில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் கமல் ஹாசனின் விக்ரம் படத்தின் மீது தான், மாபெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் ரசிகர்கள்.

அதனை தொடர்ந்து விக்ரமின் கோப்ரா, AK 61, தளபதி 66, தலைவர் 169, வாடிவாசல் ஆகிய படங்கள் மீதும் எதிர்பார்ப்பு எகிற கொண்டே போகிறது.
ஆனால், தமிழ் திரையுலமே கொண்டாட காத்திருக்கும் மாபெரும் படைப்பு பொன்னியின் செல்வன் 1 படமும் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துகொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுத்திருந்து பார்ப்போம் இதில் எந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு அடையாளமாக விளங்க போகிறது என்று..