கணவர் இறந்த பிறகும் மாங்கல்யம் அணிந்து பூ, பொட்டு வைத்திருப்பது ஏன்?- உஷா உதூப் ஓபன் டாக்
உஷா உதூப்
பாப் பாடகியாக அறிமுகமாகி இந்திய சினிமாவில் தன் கர்ஜிக்கும் குரல் மூலம் தனி ராஜ்ஜியம் உருவாக்கியவர் பாடகி உஷா உதூப்.
ஹிந்தி சினிமாவில் பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கி பின் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்ற உஷா உதூப் இந்திய சினிமாவின் பாப் குயின் என கொண்டாடப்படுகிறார்.
பாடகி பேட்டி
பாடகி உஷா உதூப் கணவர் ஜானி கடந்தாண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கணவர் இறந்த பிறகும் மாங்கல்யம் அணிந்து, பூ, பொட்டி வைத்திருப்பது ஏன் என்பது குறித்து கூறியுள்ளார்.
அதில் அவர், இந்தியாவில் கணவனை இழந்துவிட்டால் பூ, பொட்டு, மாங்கல்யம் எல்லாவற்றையும் துறந்துவிடுவார்கள். அதை நீங்கள் நம்புறீங்க என்றால் அதை நீங்கள் பின்பற்றலாம்.
ஆனால் நான் அதை செய்தேன் என்றால் வெளிவேஷம் போடுகிறேன் என்று அர்த்தம். ஏனென்றால் இவை அனைத்தும் என்னை வலிமையாக்குகிறது, என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.
எனக்கு தெரியும் என் கணவர் நான் பொட்டு, மாங்கல்யம் போடவில்லை என்றால் ஏன் முட்டாள் மாதிரி இதெல்லாம் பண்ற? உன் வாழ்க்கையை எப்போதும் போல் வாழு என்று சொல்லுவார் என உஷா உதூப் கூறியுள்ளார்.