வாடிவாசல் படத்தின் சூப்பர் அப்டேட்.. சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
வாடிவாசல்
சூர்யா - வெற்றிமாறன் முதல் முறையாக இணையவுள்ள கூட்டணி தான், வாடிவாசல்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

பாலா இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ள சூர்யா, அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படப்பிடிப்பு

இந்நிலையில், வகிற ஜூலை மாதம் முதல் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம், வாடிவாசல் திரைப்படம் அடுத்த வருடம், பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
விஜய், அஜித்திற்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் ! மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்..