ஜல்லிக்கட்டுக்கு தயாரான சூர்யா ! நடிகர் சூரி வெளியிட்ட புகைப்படங்கள்...
துவங்கியது வாடிவாசல்
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது, இப்படத்தின் டெஸ்ட் ஷூட் தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதில் சூர்யா, வெற்றிமாறன், தாணு என அனைவரும் இருந்தனர்.

சூரி பகிர்ந்த போட்டோஸ்
இதனிடையே தற்போது நடிகர் சூரி வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்து வரும் இடத்திற்கு விசிட் செய்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ள சூரி.
"அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம் வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். #வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் @Suriya_offl @VetriMaaran @theVcreations pic.twitter.com/3xeNU00JNF
— Actor Soori (@sooriofficial) March 21, 2022

2 மணிநேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்த KGF பாடல் ! முறியடிக்கப்பட்ட பீஸ்ட்..