வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ஹீரோயின் தானா.. புகைப்படங்களை பாருங்க
வாரணம் ஆயிரம்
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். சூர்யாவின் திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்கள் என பட்டியலிட்டால், அதில் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும்.
அப்படியே பக்தி மயமாக மாறி தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புதிய லுக் போட்டோ.. எங்கே சென்றுள்ளார் பாருங்க
ரசிகர்கள் மனம் கவர்ந்த இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில், தந்தை மகனாக நடித்திருப்பார். மேலும் சூர்யாவுடன் இணைந்து சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
முதலில் நடிக்கவிருந்த ஹீரோயின்
இந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் கவுதம் மேனன் அளித்த பேட்டியில், வாரணம் ஆயிரம் படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதில், "வாரணம் ஆயிரம் படத்தை முதலில் கல்லூரி நாட்களை மையப்படுத்தி எடுக்கவே நாங்கள் திட்டமிட்டோம். அதில் சூர்யாவிற்கு ஜோடியாக அசின் நடிக்கவிருந்தார். ஆனால் பிறகு அப்படம் ஒரு ஆக்ஷன் கதையாக மாற்ற திட்டமிட்டோம்" என கூறியுள்ளார்.
அசினை வைத்து எடுக்கவிருந்த வாரணம் ஆயிரம் படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதை நீங்களே பாருங்க..