இரண்டாவது நாளில் அதிகரித்த வாத்தி படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா
வாத்தி
தனுஷ் - வெங்கி அட்லூரி கூட்டணியில் கடந்த 17ம் தேதி வெளிவந்த திரைப்படம் வாத்தி.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் முடிவில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.
வசூல்
ஆம், இரண்டாவது நாளில் ரூ. 18 கோடி வரை வசூல் செய்து இதுவரை ரூ. 28 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது வாத்தி திரைப்படம்.
இந்த வார இறுதி வசூல் இதை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் மயில்சாமி காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
