வடக்குப்பட்டி ராமசாமி திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில் மீண்டும் ஒரு படமாக வந்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
70களில் வடக்குப்பட்டி என்ற ஊரில் காட்டேரி சுற்றி வருவதாக இருக்க, ஒரு நாள் அந்த காட்டேரி சந்தானத்துக்கு சொந்தமான நிலத்தில் அடிபட்டு விழுகிறது.
அங்கு ஒரு திருடன் திருடி வந்த பானையை சாமி என்று மக்கள் கும்பிட, கடவுள் நம்பிக்கையே இல்லாத சந்தானம் தன் நிலத்தில் பானை இருப்பதால், அங்கையே கோவில் கட்டி பணம் சம்பாதிக்கிறார்.
அதை தொடர்ந்து அந்த ஊர் வட்டாச்சியாளர் சந்தானம் உதவியுடன் கோவிலில் பணம் சம்பாதிக்கலாம் என நினைக்க, அதற்கு சந்தானம் மறுக்க, பிறகு அவர் சில சூழ்ச்சி செய்து கோவிலை மூடுகிறார், பிறகு ஊர் ஒன்று சேர்ந்ததா, கோவில் திறக்கப்பட்டதா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
எப்போதும் படம் முழுவதும் கவுண்டர் வசனங்களால் நிரப்பும் சந்தானம் இதில் அடக்கி வாசித்துள்ளார், அவருடன் வரும் மாறன், சேஷு தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாவே கலக்குகின்றனர்.
அதிலும் ஊர் மக்களுக்கு மெட்ராஸை நோயை பரப்ப, சென்னை வரை சென்று சேஷு மாறன் செய்யும் சேட்டைகள் வயிறு குழுங்க சிரிக்க வைக்கிறது.
ஆனால், அந்த சிரிப்பு படம் முழுவதும் உள்ளதா என்றால் கேள்விக்குறி தான். மேகா ஆகாஷ் ஏதோ 10 நாளைக்கு ஒரு நாள் கால்ஷிட் கொடுத்தது போல் எப்போதாவது படத்திலும் வருகிறார், போகிறார்.
படத்தில் இரண்டு பெரிய தலைக்கட்டுகளாக காட்டப்படும் ஜான் விஜய், ரவி மரியா அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது அவர்கள் முட்டாள் தனங்களை காமெடியாக எடுத்துள்ளனர், அதற்காக வடிக்கட்டிய முட்டாள் போல் காட்டியது, சரி காமெடி படம் லாஜிக் பார்க்க கூடாது தான்.
ஊருக்குள் சண்டை வரகூடாது, வந்தால் கோவில் திறக்காது கழகத்தை மூட்ட ஒரு கூட்டணி, அதை அடக்க ஒரு கூட்டணி என்று சுவாரஸ்ய கதையில் அங்கும் இங்கும் காமெடி காட்சிகளை வைத்து முடிந்தளவிற்கு ஒரு பொழுதுப்போக்கு படத்தை கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அது வெறும் முயற்சியாகவே போனது தான் வருத்தம்.
மூட நம்பிக்கை வைத்து ஒரு படம் என்றால் கிளைமேக்ஸில் எதோ ஒரு வகையில் மக்களுக்கு தெளிவு வரவேண்டும், பெயருக்கு எம் எஸ் பாஸ்கரை வைத்து 4 வசனம் பேசி மீண்டும் அந்த மூடநம்பிக்கை உலகிலேயே மக்களை கொண்டு செல்வது போல் முடித்துள்ளனர், நம்பிக்கையாக காட்டியிருக்கலாம், மூட நம்பிக்கையாக இல்லாமல்.
க்ளாப்ஸ்
மாறன், சேஷு காம்போவில் வரும் காட்சிகள் அட்டகாசம்.
கிளைமேக்ஸில் வரும் மொட்டை ராஜேந்திரன் காட்சிகள்.
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.
மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம்.. அந்த காமெடியை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆமாங்க அந்த கவுண்டமணி காமெடி தான்