அஜித், விஜய் குறித்து கேள்வி.. வடிவேலு சொன்ன பதில், உஷார் தான் போங்க
வடிவேலு
மதுரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று வைகை புயல் வடிவேலு. இன்றும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் முதல் முறையாக சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, வடிவேலு பகத் பாசிலுடன் இணைந்து 'மாரீசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு வடிவேலு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வடிவேலு சொன்ன பதில்
செய்தியாளர் ஒருவர் அவரிடம், விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார் அவர் இடத்தை நீங்கள் நிரப்பிவீர்களா? என்று கேள்வி எழுப்ப அதற்கு வடிவேலு புத்திசாலித்தனமாக அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் வேற ஏதாவது பேசுவோமா என்று கேட்டுள்ளார்.
அதை தொடர்ந்து, அஜித் கார் ரேஷிங் விபத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் வேற ஏதாவது பேசுவோமா என்று யோசிக்காமல் ஒரே பதிலை கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
