வடிவேலு
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக இருப்பவர் வடிவேலு.
இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் எமோஷன் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என மாமன்னன் படத்தின் மூலம் காட்டினார்.

இதை தொடர்ந்து அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் வடிவேலுவுக்கு ஜெகதீஸ்வரன் எனும் ஒரு தம்பி இருக்கிறார்.
இவர் அச்சு அசல் அப்படியே பார்ப்பதற்கு வடிவேலு போலவே இருப்பார். அவருடைய புகைப்படங்கள் கூட வைரலானது.
வடிவேலுவின் தம்பி மரணம்
இந்நிலையில், வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மரணத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
சந்திரமுகி பட புகழ் நடிகை சொர்ணாவா இது, இப்போது எப்படி உள்ளார் பாருங்க- அழகிய குடும்ப போட்டோ