நடிகர் வடிவேலுவுக்கு இத்தனை கோடி சொத்து இருக்கிறதா? எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
வடிவேலு
சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி - செந்தில், மனோரமா, விவேக், வடிவேலு என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை சிம்மாசனத்தில் பலரும் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்படி 90ஸ் காலகட்டத்தில் அனைவரின் மனதில் இன்றும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் வைகை புயல் வடிவேலு. உடல்மொழி நகைச்சுவையால் பாமர மக்களின் மனதில் இடம்பிடித்த இவர், வெள்ளித்திரையில் துவங்கி மீம்ஸ் வரை கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக மாமன்னன் வெளிவந்தது. இப்படத்தில் நகைச்சுவையை முழுமையாக தவிர்த்து சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல் உள்ளன. வடிவேலுவிடம் இரண்டு Audi கார்கள், BMW, Toyota என நான்கு சொகுசு கார்கள் உள்ளது. இந்த கார்களின் மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என கூறுகின்றனர்.

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு! IBC Tamilnadu
