பிறந்தநாள் ஸ்பெஷல்!! வைகை புயல் வடிவேலு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா?
வடிவேலு
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களின் பொக்கிஷம் என்றால் அது வடிவேலு தான். மக்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த வரவேற்பு யாருக்கும் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
நடுவில் நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ்கள் மூலம் மக்களின் மனதில் நிலைத்து இருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தை இயக்குநர் சுந்தர் இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், மைம் கோபி, பகவதி, வாணி போஜன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்தனை கோடியா?
இந்நிலையில், இன்று தனது 65- வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.