அனைவரும் எதிர்பார்த்த வடிவேலு - பிரபு தேவா காம்போ.. 25 வருடங்களுக்கு பின் மீண்டும் கூட்டணி
வடிவேலு - பிரபுதேவா
நகைச்சுவையில் மாபெரும் ஹிட் அடித்த காம்போ வடிவேலு - பிரபுதேவா. எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், காதலன் ஆகிய படங்களில் வடிவேலுவும் பிரபு தேவாவும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

அதே போல் பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி மற்றும் வில்லு ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் வடிவேலு நகைச்சுவையில் மிரட்டி இருப்பார்.
வீட்டைவிட்டு Hostel சென்ற நிலா, சோழனிடம் அவர் கூறிய கோபமான வார்த்தை... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
25 வருடங்களுக்கு பின்
ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இந்த கூட்டணி கிட்டதட்ட 25 ஆண்டுகளாக இணையாமல் இருந்தது. சரியான கதை அமைந்தால் மீண்டும் இருவரும் இணைவோம் என கூறியிருந்த நிலையில், தற்போது இவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.

இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபு தேவா, வடிவேலு புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை துபாயில் நடைபெற்றுள்ளது.
friendship❤️❤️❤️ pic.twitter.com/4IZC4ZJ2i5
— Prabhudheva (@PDdancing) August 26, 2025
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri