நடிகரின் கால்களை பிடிக்க மறுத்த நடிகர் வடிவேலு.. உண்மையை போட்டுடைத்த நடிகர்
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. இவர் நடிப்பில் தற்போது நாய் சேகர் returs மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் நாய் சேகர் returns படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.

சுராஜ் இயக்கத்தில் இதற்க்கு முன் நடிகர் வடிவேலு தில்லாலங்கடி, கத்தி சண்டை, தலைநகரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், முக்கியமாக சுராஜ் இயக்கிய ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
ஆம், சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் படிக்காதவன். இப்படத்தில் விவேக் நடித்திருந்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடித்திருந்தது வடிவேலு தான். வடிவேலு நடித்த பல காட்சிகள் இப்படத்தில் படமாக்கப்பட்ட நிலையில், தீடீரென ஒரு நாள் படத்தில் இருந்து விலகிவிட்டாராம் வடிவேலு.
சுமன் கால்களை பிடிக்க மறுத்த வடிவேலு
ஏனென்றால், வில்லன் நடிகர் சுமன் கால்களை பிடித்து நடிப்பது போல் நகைச்சுவை காட்சி ஒன்று படிக்காதவன் படத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் விவேக் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், அந்த காட்சியில் சுமன் கால்களை பிடித்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் வடிவேலு. இதுமட்டுமின்றி, வடிவேலுவுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.

படப்பிடிப்பின் போது, இயக்குனரின் பேச்சை கேட்காமல் தன் போக்கில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலுவிடம் சென்று, இயக்குனர் சொல்வதை போல் நடிங்க என்று தனுஷ் கூறினாராம். இதனால், கடுப்பான வடிவேலு சந்திரமுகி படத்தில் ரஜினிக்கே சில விஷயங்களை நான் சொல்லிக்கொடுத்தேன். இங்கு அவருடைய மருமகன் எனக்கு சொல்லி கொடுக்கிறார் என்று சந்தம் போட்டுள்ளாராம்.
இந்த பிரச்சனைகளுக்கு பின் முழுமையாக படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டாராம். இதன்பின், நடிகர் விவேக் இப்படத்தில் அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் கமிட்டாகி, நடித்து கொடுத்துள்ளார் என்று அப்படத்தில் நடித்து ஒரு முக்கிய நடிகர் பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri