என் விவாகரத்துக்கு காரணம் இதுதான்.. பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம்
வைக்கம் விஜயலக்ஷ்மி
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் வைக்கம் விஜயலக்ஷ்மி. இவர் குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.
புதிய உலகை, காக்கா முட்ட, பிறவி, என் ஜீவன், வாயாடி பெத்த புள்ள என பல சூப்பர்ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். கடந்த வரும் சென்சேஷனலான மலையாளத்தில் வெளிவந்த அங்கு வான கோணிலு பாடலையும் இவர் தான் பாடியிருந்தார்.
இப்படி தமிழ் மற்றும் மலையாளத்தில் பின்னணி பாடகியாக கொடிகட்டி பறந்துவரும் வைக்கம் விஜயலக்ஷ்மியின் வாழ்க்கையில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு துயரம் நடந்துள்ளது.
ஆம், அவருடைய திருமண வாழ்க்கை தான் அது. தனது திருமண வாழ்க்கை குறித்தும், ஏன் விவாகரத்து பெற்றுக்கொண்டேன் என்பது குறித்தும் வைக்கம் விஜயலக்ஷ்மி பேசியுள்ளார்.
விவாகரத்து காரணம்
இதில் "நான் விவாகரத்து பண்ணதுக்கு காரணம், மியூசிக்ல அது பண்ண கூடாது இது பண்ண கூடாது என்று என் கணவர் என்னை ரொம்ப டிஸ்கரேஜ் பண்ணாரு. என் அப்பா அம்மாவை அவாய்ட் பண்ண சொன்னாரு. நான் மியூசிக்ல கொஞ்சம் ஃபேமஸானது அவருக்கு பிடிக்கல, அவருக்கு கொஞ்சம் ஈகோ இருந்ததுன்னு நினைக்கிறேன்.
கல்யாணம் ஆகி ஒரு மாதத்திலேயே டிஸ்கரேஜ் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. நான் சாமி ரூமுக்கு போனா கூட அவருக்கு பிடிக்காது. தேவையில்லாம கோபப்படுவாரு. அதனால் எனக்கு நிம்மதியே இல்லாம போச்சு. அது எல்லாம் தான் என் விவாகரத்துக்கு காரணம்" என அவர் கூறியுள்ளார்.