ஒரே ஒரு படத்தில் நடித்த வைரமுத்து.. அதற்காக இயக்குனர் பட்ட கஷ்டம்
கவிஞர் வைரமுத்து ஒரே ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அது எந்த படம் என தெரியுமா?
வைரமுத்து
பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என எழுத்து துறையில் புகழ்பெற்று இருப்பவர் வைரமுத்து. அவரது பல பாடல்கள் காலம்கடந்து தற்போதும் ரசிக்கப்படும் ஹிட் ஆகி இருக்கின்றன.
வைரமுத்துவில் ஹிட் பாடல்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும். ஏராளமான விருதுகளையும் அவர் வென்று இருக்கிறார். சமீப காலமாக அவர் பாடல்கள் எழுதுவது குறைந்திருப்பதற்கு காரணம் அவர் சிக்கிய சர்ச்சைகள் தான்.
நடித்த ஒரே ஒரு படம்
வைரமுத்து இதுவரை ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து இருக்கிறாராம். அவர் ஜோடி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வருவார். காதல் கடிதம் தீட்டவே பாடலுக்கு முன் வரும் காட்சி அது.
இயக்குனர் பிரவீன் காந்தி தற்போது அளித்திருக்கும் பேட்டியில் அது பற்றி பேசி இருக்கிறார். வைரமுத்து ஆரம்பத்தில் இருந்தே நடிக்க முடியாது என கூறிவந்தாராம், ஆனால் பல மாதங்கள் கெஞ்சி தான் அவரை நடிக்க வைத்திருக்கிறார்.
இறுதியில் படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் வைரமுத்துவுக்கு சம்பளம் கொடுக்க தனது சம்பளத்தை இயக்குனர் விட்டுக்கொடுத்தாராம்.
யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை எலிமினேட் செய்யும் பிக் பாஸ்? ஷாக்கில் ரசிகர்கள்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
