100 மில்லியன்களை தொட்ட ஆண்டிபட்டிக் கணவாக்காத்து பாடல்.. பெருமையுடன் முக்கிய பிரமலம் வெளியிட்ட பதிவு
தர்மதுரை
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தர்மதுரை. இப்படத்தை சீனுராமசாமி இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
வைரமுத்து இப்படத்தில் இடம்பெரும் புகழ்பெற்ற ஆண்டிபட்டிக் கணவாக்காத்து எனும் பாடலுக்கு வரிகள் எழுந்திருந்தார். இப்படம் வெளிவந்த சமயத்திலேயே இப்பாடல் மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
வைரமுத்து பெருமையுடன் பதிவு
இந்நிலையில், தர்மதுரை வெளிவந்து 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இன்றுடன் ஆண்டிபட்டிக் கணவாக்காத்து பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் {10 கோடி} பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
சீனுராமசாமி இயக்கிய
— வைரமுத்து (@Vairamuthu) June 26, 2023
யுவன்சங்கர்ராஜா இசைத்த
'தர்மதுரை' எனக்கு
ஏழாம் தேசிய விருது
பெற்றுத் தந்த படமாகும்
அதில் இடம்பெற்ற
'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து'
10கோடிப் பார்வையாளர்களைக்
கடந்திருப்பது
பெருமை மற்றும் பெருமிதம்
எங்கள் தலைகளை
தேவதைகள் கோதுகின்றன
▶️ https://t.co/noLjvee8pE… pic.twitter.com/GJLP9f5WxP
இதற்காக வைரமுத்து பெருமிதம் கொள்ளும் வகையில் பதிவு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வைரமுத்துவின் பதிவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
#மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம்.
— Seenu Ramasamy (@seenuramasamy) June 26, 2023
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும்
'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து'
பாடலை… https://t.co/JyZxkrBDa5
இளையராஜாவிற்காக தனது வாழ்க்கையின் முக்கிய விஷயத்தை தியாகம் செய்த சின்னக்குயில் சித்ரா..