முகப்பருவுக்கு இதை அரைத்து போடுங்கள்- சூப்பரான டிப்ஸ் கொடுக்கும் பேரன்பு சீரியல் நடிகை
நடிகை வைஷ்ணவி
விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் நடித்தாலே அவர்கள் ரசிகர்களிடம் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். அப்படி நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் வைஷ்ணவி.
அந்த தொடரை தொடர்ந்து ஜீ தமிழ் பக்கம் வந்த வைஷ்ணவி பேரன்பு என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு தனது முடி மற்றும் முக அழகு குறித்து டிப்ஸ் கூறியுள்ளார்.
நடிகை சொன்ன டிப்ஸ்
நான் எப்போதும் என் தலைமுடியை எண்ணெயால் மசாஜ் செய்கிறேன்.
அதுபோல் என் அம்மா, செக்கில் வாங்கிய எண்ணெய்யில் செம்பருத்தி, கற்றாழை, கறிவேப்பிலை, வெந்தயம், வெங்காயம், மருதாணி சேர்த்து நல்லா கறுப்பு நிறமாக வரும் வரை காய்ச்சுவாங்க.

குமரன் பிக்பாஸ் செல்லவில்லை, உள்ளே செல்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த பிரபலமமா?- யார் பாருங்க?
அதை இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி பயன்படுத்தலாம். இது தான் நான் என் தலை முடி பராமரிபுக்கு செய்வது. தோல் பராமரிப்புக்கு கற்றாழை மற்றும் பப்பாளி முகத்தில் பூசுவேன்.
கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டில்ல வச்சி, அதை அடிக்கடி ஸ்கால்ப்பில், முடியின் வேர்களில் தெளிப்பேன் என நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளார்.