அஜித்தின் வலிமை படத்தின் இதுவரையிலான முழு வசூல் விவரம்
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய பிரபலம். அவர் அடுத்து என்ன செய்வார் என அறிவதிலேயே ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம் இருக்கும்.
படங்களில் நடிப்பதை தாண்டி போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல், பைக்கில் சுற்றுலா செல்வது என பல விஷயங்களில் நாட்டம் காட்டி வருகிறார்.
வலிமை திரைப்படம்
அஜித்தின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ஒரு படம் வலிமை. கிட்டத்தட்ட இந்த படத்தை திரையில் காண 2 வருடங்கள் ஆகிவிட்டன.
கொரோனா பிரச்சனையால் முதலில் நடித்த பிரபலங்கள் மீண்டும் படப்பிடிப்பிற்கு வரவே தயங்க புதிய கலைஞ்ர்களை வைத்து மீண்டும் பழைய காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி ஏகப்பட் பிரச்சனைகளை தாண்டி படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி படு மாஸாக வெளியாகிவிட்டது.
படத்தின் வசூல் விவரம்
முதல் நாளில் இருந்தே படம் தெறிக்கும் வசூல் வாதனை செய்து தான் வருகிறது. 3வது வாரத்தில் கூட படத்தின் புக்கிங்கிற்கு எந்த குறைச்சலும் இல்லை என சில தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 190 கோடிக்கு வசூலித்துள்ளதாம், விரைவில் ரூ. 200 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா பாக்கியா?- ஷாக்கில் ரசிகர்கள்