10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடருவேன் - பரபரப்பை ஏற்படுத்திய வலிமை இயக்குனர் !
வலிமையை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் பெரியளவில் வசூல் சாதனை படைத்தது.
இதனிடையே வலிமை படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் அஜித் - வினோத் கூட்டணி AK 61 படத்திற்காக இணையவுள்ளனர். ஏற்கனவே இப்படத்திற்காக அஜித் போட்டுள்ள கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது.

வினோத்தின் அதிரடி
இந்நிலையில் சமீபத்தில் வலிமை திரைப்படத்தை OTT-யில் வெளியிட தடைவிதிக்க கோரி மெட்ரோ திரைப்பட தயாரிப்பாளர் தொடர்ந்திருந்தார். மனுதாரரால் பதிப்புரிமை மீறலுக்கு முதன்மையான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி நீதிபதிவலிமை படத்திற்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார்.
மேலும் தற்போது வலிமை பட இயக்குனர் எச்.வினோத் "அன்றாட செய்திகளின் அடிப்படையிலேயே 'வலிமை' உருவானது, 10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடருவேன்" என கூறியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

பீஸ்ட் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியுடன் இதோ..