வலிமை படம் குறித்து இயக்குனர் வினோத்திடம் நடக்கவுள்ள விசாரணை ! பரபரப்பான தகவல்..
வலிமை படத்தால் நடக்கும் விஷயம்
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான வலிமை திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே வலிமை திரைப்படம் உலகமுழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது வலிமை படம் குறித்த பரபரப்பான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி வலிமை படத்தில் சர்வதேச போதைப்பொருள் வியாபாரம் சென்னையில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை காண்பித்து இருப்பார்கள்.
இது கற்பனையா! கதையா! என்பது குறித்து இயக்குனர் வினோத்திடம் விசாரணை நடத்த உள்ளார்களாம். சென்னையில் போதைப்பொருள் நெட்ஒர்க் இயங்காத படி முதல்வர் நடவடிக்கை எடுக்க சொல்லியிருப்பதால் எந்த விசாரணை மேற்கொள்ளவதாகவும் கூறப்படுகிறது.

ஹிந்தி பதிப்பில் எந்த ஒரு புரொமோஷனும் இல்லாமல் அஜித்தின் வலிமை இவ்வளவு வசூலித்துள்ளதா?