வலிமை மூன்று மாதங்களாக வைத்திருந்த ரெகார்ட்-யை ஒரே நாளில் முறியடித்த பீஸ்ட் !
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. ஆக்ஷன், ஸ்டைல், BGM என அனைத்து தரப்பையும் கவர்ந்துள்ள அந்த ட்ரைலர் யூடியூபில் பார்வைகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வரை பீஸ்ட் பட ட்ரைலர் 28+ மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. இதுவே தென்னிந்தியளவில் அதிகம் பார்வைகளை குவித்த ட்ரைலர் என்ற சாதனை படைத்துள்ளது.

வலிமை ட்ரைலர்
இதனிடையே தற்போது விஜய் ரசிகர்கள் வலிமை படத்துடன் ஒப்பிட்டு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி வலிமை ட்ரைலர் 3 மாதங்கள் ஆகியும் யூடியூபில் 23 மில்லியன் பார்வைகளையே குவித்துள்ளது.
அதனால் அதனை முறியடிக்க பீஸ்ட் ட்ரைலர் முழுமையாக ஒரு நாள் கூட எடுத்துக்கவில்லை என கூறிவருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் BGM அப்பட்டமான காப்பியா ! இணையத்தில் பரவி வரும் வீடியோ..