வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு எடுத்த வானதி.. அதிர்ச்சியில் பாண்டியன்.. அய்யனார் துணை சீரியல்
வானதி எடுத்த முடிவு
பாண்டியன் தன்னை மதிக்கவில்லை என்பதால் இனி இந்த காதல் தொடராது என்றும், நாம் பிரிந்துவிட்டோம் என்றும் கூறி பாண்டியனிடம் இருந்து வானதி விலகி வந்துவிட்டார்.

இதன்பின், தனக்கு நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி தனது அப்பா அம்மாவிடம் வானதி கேட்கிறார். பாண்டியனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என ஒற்றை காலில் நின்றுகொண்டிருந்த வானதியா இப்படி கூறுகிறார் என அவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
வீட்டில் இந்த விஷயத்தை வானதி கூறிய நிலையில், அடுத்த நாளே வானதியின் அண்ணன் பாண்டியனை நேரில் பார்த்து வம்பிழுக்கிறார். வானதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் என்று அவர் சொல்ல, பாண்டியனுக்கும் வானதியின் அண்ணனுக்கும் சண்டை ஏற்படுகிறது.
அதிர்ச்சியில் பாண்டியன்
இதன்பின், பாண்டியனை சந்திக்க வரும் வானதி, எதற்காக என் அண்ணனிடம் சண்டை போட்டாய் என்று கேட்கிறார். மேலும், என் அண்ணன் சொன்னது உண்மைதான் நான் வேறு ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளேன் என வானதி கூறவும், அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார் பாண்டியன்.

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri