நடிகரை அடித்த வாணி போஜன்..மேடையில் ஓப்பனாக கூறிய நடிகை.
லவ் படம்
பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத், தனது 50-வது படமான லவ் படத்தில் வாணி போஜனுடன் நடிக்கிறார்.
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் கூட்டணியில் மிரள் படம் தற்போது வெளியாகிய நிலையில், மீண்டும் இருவரும் லவ் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.
மலையாளத்தில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற லவ் படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரித்து இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா. இப்படத்தில் விவேக் பிரசன்னா, ராதா ரவி மற்றும் டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
லவ் டீசர்
தற்போது லவ் படத்திப் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டீசரை காதல் ஜோடியான ஆர்யா, சயீஷா இனைந்து வெளியிட்டனர். கொலையை செய்துவிட்டு அதை மறைக்க பரத் செய்யும் விசயங்கள் விறுவிறுப்புடன் டீசரில் காட்டி உள்ளனர். வித்தியாசமாக உள்ளதனால் இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாணி போஜன்
டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய வாணி போஜன், "படத்தின் சண்டை கட்சியின் போது நடிகர் பரத்தை கடுமையாக அடித்துள்ளேன், அவரும் என்னை திருப்பி அடித்துள்ளார். இந்த படத்திற்காக இருவரும் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம்" என்று கூறினார்.
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் எப்படி இருக்கிறது.. வெளிவந்த முதல் விமர்சனம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
