பாடகி வாணி ஜெயராம் இறந்தது எப்படி? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் தெரியவந்த உண்மை
வாணி ஜெயராம்
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்த நிலையில் அது சந்தேக மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். அது பற்றி தீவிர விசாரணையும் நடைபெற்று வந்தது.
இறப்பிற்கான காரணம்
தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்திருக்கும் நிலையில் அதில் வாணி ஜெயராம் தலையில் ஏற்பட்ட காயத்தால் தான் இறந்திருக்கிறார் என தெரியவந்திருப்பதாக கூறி இருக்கின்றனர். அவரது படுக்கை அறையில் இருக்கும் சின்ன மேஜையில் தலை இடித்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அவர் இறந்திருக்கிறார்.
மேலும் சிசிடிவியை ஆராய்ந்ததில் வேறு யாரும் அவரது வீட்டுக்கு வந்து செல்லவில்லை என்பதையும் உறுதி செய்திருக்கும் போலீசார் வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என கூறி இருக்கின்றனர்.
நாங்க போனது ஹனிமூன் இல்லை.. திருமணத்திற்கு பின் ஹன்சிகா கூறிய விஷயம்

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
