வாணி ராணி சீரியல் புகழ் நடிகைக்கு திருமணம் முடிந்தது... சிங்கப்பூர் Pilot, கியூட் ஜோடி
சீரியல் நடிகை
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தான் இப்போது ரசிகர்களின் பேவரெட் நடிகர்களாக உள்ளனர்.
வெள்ளித்திரை நாயகிகளை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்களிடம் மவுசு கூடியுள்ளது.
தற்போது ஒரு சீரியல் நடிகையின் திருமண செய்தி தான் வெளியாகியுள்ளது.
யார் அவர்
வாணி ராணி, அழகு போன்ற தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற நடிகையாக வலம் வந்தவர் சாரா.
பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மேக்கப் ஆர்டிஸ்டாக பல சின்னத்திரை பிரபலங்களை அலங்கரித்துள்ளார். இவரது 2வது மேக்கப் ஸ்டூடியோவை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்.
தன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க மீனா-முத்துவிற்கு ரோஹினி கிளப்பும் பிரச்சனை... வித்யா செய்துமுடித்தாரா?
இந்த நிலையில் சாரா, சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். பைலட்டாக வேலை பார்ப்பதோடு அங்கேயே குடியுரிமையும் வைத்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சாரா தனது மேக்கப் அகாடமியை சிங்கப்பூரிலேயே தொடரவும் முடிவு செய்துள்ளாராம்.