பிக் பாஸ் வீட்டிற்குள் ஜேவிகா - விசித்ரா மோதல்.. பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட வனிதா..

Kathick
in பிரபலங்கள்Report this article
ஜேவிகா - விசித்ரா மோதல்
நேற்று பிக் பாஸ் வீட்டில் விசித்ராவிற்கும், ஜோவிகாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. படிப்பு சம்பந்தப்பட்ட வாக்குவாதத்தில் இருவருமே சற்று கடுமையாக பேசிக்கொண்டனர்.
படிப்பு கண்டிப்பாக அவசியம் என்று விசித்ரா பேசினார். ஆனால், ஜோவிகா தன்னுடைய படிப்பை பற்றியும், பர்சனல் விஷயங்கள் குறித்தும் பேசவேண்டாம் என கோபத்துடன் கூறினார்.
இந்த விஷயம் நடந்துமுடிந்தபின் விசித்ரா கண்கலங்கி அழுதார். விசித்ரா பக்கமும் சில ரசிகர்கள் ஆதரவாக பேசிய நிலையில், இன்னும் சிலர் ஜோவிகா பேசியதும் தவறில்லை என கூறி வருகிறார்கள்.
வனிதா வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், தனது மகளுக்கு ஆதரவாகவும் விசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பெற்றோர்களுக்கு தெரியும், குழந்தைகளை எப்படி வழிநடத்த வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், விசித்ரா பேசியது சரி தான், படிப்பு அனைவருக்கும் அவசியம் என பலரும் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இன்று கமல் ஹாசன் இதுகுறித்து என்ன சொல்ல போகிறார் என்று.