அவங்க எல்லாரும் கோமாளிகள், நயன்தாரா, விக்கி குறித்து வனிதா அதிரடி கருத்து.. இதோ
நயன்தாரா - விக்கி சர்ச்சை
சமீபத்தில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தங்களுடைய இரட்டை குழந்தைகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி உலகிற்கு அறிமுகம் செய்தனர்.
திருமணம் ஆகி நான்கு மாதங்களில் எப்படி குழந்தை என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். வாடகைத்தாய் மூலமாக தான் இந்த குழந்தைகளை நயன்தாரா பெற்றுக்கொண்டுள்ளார் என அதன்பின் தெரியவந்தது. lஇது சட்டப்படி குற்றம் என்று கூறி பலரும் சர்ச்சை கிளப்பினார்கள்.
வனிதா அதிரடி கருத்து
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களின் இரட்டை குழந்தைகள் குறித்து வனிதா விஜயகுமார் ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.
இதில், அன்பான பெற்றோர்களுக்கு பிறந்த இரண்டு அழகான குழந்தைகள் என்றும் சிலர் இந்த விஷயத்தை சர்ச்சையாக பேசி வருகிறார்கள், அவர்கள் எல்லாரும் கோமாளிகள். திருந்தேவேமாட்டாங்க என்றும் கூறியுள்ளார். மேலும் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கும் தனது வாழ்த்துக்களையும் கூறி தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
நயன்தாராவிற்கு ஆதரவாக வனிதா போட்டுள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. வனிதா போட்டுள்ள முழு பதிவு இதோ..