விக்ரமன் என்ன காந்தியா.. பிக் பாஸ் எதுக்கு வந்தார்: தாக்கி பேசிய வனிதா
அஸீம் vs விக்ரமன்
பிக் பாஸ் 6 வீட்டில் அஸீம் தான் தவறுகள் செய்து வாரம்தோறும் கமல்ஹாசனிடம் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார். மாத்திக்கிறேன் என எல்லா வாரமும் சொல்றீங்க, ஆனால் மாறுவதில்லை என கமல் அவரை கேட்டிருக்கிறார்.
அஸீம் செய்யும் விஷயங்கள் எல்லாம் வேண்டுமென்றே தனியாக தெரியவேண்டும் என்பதற்க்காக தான் செய்கிறார் என எல்லோரும் விமர்சித்து வருகிறார்கள். அதை அவரும் ஒப்புக்கொண்டார். மற்றொரு போட்டியாளரான விக்ரமன் தான் அஸீம் உடன் சண்டை போட்டு வருகிறார்.
விக்ரமனை தாக்கி பேசிய வனிதா
அஸீம் எது செய்தாலும் அவரிடம் விக்ரமன் தான் சண்டைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரது சண்டை தான் தினமும் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதா தற்போது விக்ரமனை தாக்கி பேசி இருக்கிறார். "விக்ரமன் காத்தியாவே இருக்கட்டும்.. பிக் பாஸ் எதுக்கு வந்தே. Limelight தேடி தானே நீயும் வந்த. அவன் (அஸீம்) நடிகன். ஒரு politician ஆக நல்லது பண்ண நினைத்தால் வெளியில் இருந்து பண்ணு. உனக்கெதுக்கு பிக் பாஸ். ஒரு நடிகருக்கு பிக் பாஸ் அவசியம். நீ எதுக்கு வரிசையில் நின்னு ஆடிக்ஷன் பண்ணி பிக் பாஸ் வந்திருக்க."
"அஸீம் பண்றது தப்புனு எல்லாருக்கும் தெரியும், விக்ரமன் எதுக்கு எல்லா கேமரா முன்னாடியும் போய் சொன்னதையே சொல்லிட்டு இருக்காரு" என வனிதா விக்ரமனை தாக்கி பேசி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் ஹனிமூன் கூட செல்லாமல் ஹன்சிகா செய்யப்போகும் விஷயம்