வனிதாவின் இரண்டாம் மகள் எங்கே போனார்? கிசுகிசுக்களுக்கு அவரே சொன்ன விளக்கம்
வனிதா தனது இளைய மகள் பற்றி சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
வனிதா
நடிகை வனிதா விஜயகுமாருக்கு அறிமுகம் தேவையில்லை. பல சர்ச்சைகளுக்கு பெயர் போன அவர் தற்போது சொந்தமாக துணிகடை நடத்தி வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கடை பற்றிய போட்டோக்கள் தான் அதிகம் பதிவிட்டு வருகிறார்.
வனிதா பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வந்த போது அவரது இரண்டு மகள்களையும் வரவைத்திருந்தார். பல ட்ரோல்கள் சந்தித்தாலும் அவர் அம்மாவாக ஜெயித்துவிட்டார் என கமல்ஹாசன் அப்போது கூறி இருந்தார்.
வனிதா அவரது இரண்டு மகள்கள் உடன் வசித்துவந்த நிலையில், சமீப காலமாக அவரது இரண்டாம் மகள் போட்டோவை பதிவிவிடுவதே இல்லை. முதல் மகள் உடன் மட்டுமே போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

வனிதா விளக்கம்
இந்நிலையில் தற்போது வனிதா அளித்து இருக்கும் பேட்டியில் அவரது இளைய மகள் அவளது அப்பா உடன் ஹைதராபாத்தில் இருக்கிறார் என்கிற உண்மையை தெரிவித்து இருக்கிறார். வனிதா அவரை வலுக்கட்டாயமாக இங்கே வைத்திருக்கிறார் என முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் போலீஸ் புகார் முன்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பாக வனிதாவிடம் பிக் பாஸ் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டதாக அப்போதே செய்திகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
"அங்கேயே பள்ளியில் படிக்கும் அவள் பாதுகாப்பாக தான் இருக்கிறாள். இந்த வயதில் எப்போதும் ஒருவர் இருந்தாக வேண்டும். எப்போதும் அவளுக்கு நினைப்பு இங்கேயே தான் இருக்கும். அடிக்கடி பேசுவாள். நானும் சமீபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்" என வனிதா தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நடத்தும் சேனலை விளாசிய பிரபல நடிகை! வெடித்த சர்ச்சை
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan