ஹீரோவாக அறிமுகமாகும் நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகன்! படத்தின் இயக்குனர் யார் தெரியுமா
வனிதா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவருடைய மகள் ஜோவிகா சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் இயக்கத்தில் தற்போது உருவாகி வெளிவர காத்திருக்கும் டீன்ஸ் திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் வனிதாவின் மகள் ஜோவிகா.
நடிகை வனிதாவிற்கும் அவருடைய முதல் கணவர் ஆகாஷ் என்பவருக்கும் பிறந்தவர் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவரும் சினிமாவில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஹீரோவாக அறிமுகம்
இந்த நிலையில், விஜய் ஸ்ரீ ஹரி தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கும்கி, மைனா போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் தான் வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி ஹீரோவாக அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது.
இப்படத்தை முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது என்றும், ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் மூலம் காஜா மொய்தீன் தான் இப்படத்தை தயாரிக்கிறார் என்றும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
