விஜய்க்கு அந்த விஷயத்தில் துணையாக மாற முடிவு செய்த நடிகை வனிதா.. இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாரா
தளபதி விஜய்
விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கம் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தின் டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
நடிகர் விஜய் இன்னும் சில ஆண்டுகளில் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது. அதற்கு ஏற்றாற்போல் விஜய்யின் நடவடிக்கைகளும் இருக்கிறது.
விஜய்க்கு துணையாக வனிதா
இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால், அவருக்கு துணையாகவும் ஒரு தொண்டராகவும் நான் இருப்பேன் என நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் அரசியல் என்ட்ரி குறித்து கேள்வி வனிதாவிடம் கேட்டகப்பட்டது.
இதற்கு பதிலளித்த வனிதா 'விஜய் ஒரு புத்திசாலியான நபர். வருங்காலத்தை யோசித்து விஷயங்களை செய்வார். விஜய் தற்போது உச்சத்தில் இருக்கிறார். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வந்தால், நான் அவருக்கு துணையாக நிற்பேன். அவருக்கு ஒரு தொண்டராகவும் இருப்பேன்' என வனிதா விஜயகுமார் கூறினார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இப்படி தான் இருக்கும்.. திரையரங்கம் அதிர போகிறது