தடபுடலாக நடக்கும் திருமண வேலைகள், யாரை சந்தித்து வரலட்சுமி பத்திரிக்கை கொடுத்துள்ளார் பாருங்க
வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார்.
போடா போடி படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தாலும் அதற்கு முன்பே ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சில காரணங்களால் மிஸ் செய்துள்ளார்.
முதல் படமே அவருக்கு வெற்றிக்கொடுக்க அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார். இதற்கு இடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்தார்.
திருமணம்
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்து தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்தார்.
ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என நிறைய விமர்சனங்கள் எழுந்தன, அதற்கு வரலட்சுமி பதிலடி கொடுத்திருந்தார். தற்போது குடும்பத்துடன் வரலட்சுமி திருமண பத்திரிக்கை கொடுக்கும் வேலையை தொடங்கியுள்ளனர்.
அண்மையில் நடிகர் ரஜினியை சந்தித்து பத்திரிக்கை கொடுத்துள்ளார். இதோ அவரே பதிவிட்ட தகவல்,
Got to meet our thalaivar @rajinikanth sir and invite him and latha aunty...thank you sir for always being so warm and loving..thank you @ash_rajinikanth for veinf so sweet as always..the apple didn't fall far from the tree..❤️❤️@realsarathkumar @realradikaa #chayadevi… pic.twitter.com/X2alVW8VoD
— ????????? ??????????? (@varusarath5) June 6, 2024