உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.. காரணம் இதுதான்
வரலக்ஷ்மி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார்.
இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்படத்திற்குப்பின் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி 2 என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
எடை குறைய காரணம்
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த வீர நரசிம்ம ரெட்டி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார். ஏன், உடல் எடையை குறைத்தேன் என்பது குறித்து வரலக்ஷ்மி சரத்குமார் பேசியுள்ளார்
'ஒரு நடிகை இப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை. எனக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் தான் உடல் எடையை குறைத்தேன். அதுமட்டுமின்றி நான் அதிக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். அதுவும் ஒரு காரணம்' என கூறியுள்ளார்.
மருத்துவமனையில் தவித்த பொன்னம்பலம்.. பத்து நிமிடத்தில் ரூ.45 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்