விஜய்யின் வாரிசு இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா.. ரசிகர்கள் அதிர்ச்சி
வாரிசு
விஜய் நடிப்பில் வாரிசு படம் கடந்த ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் நல்ல வசூலை பெற்று எல்லோருக்கும் லாபம் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் கேரள விநியோகஸ்தர் தனக்கு சில கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
விஜய், சரத்குமார், ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்து இருந்த இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.
வம்சியின் நிலைமை
இயக்குனர் வம்சி வாரிசு பட ரிலீஸ் நேரத்தில் பல்வேறு பேட்டிகள் கொடுத்து இருந்தார். அந்த படத்தை சீரியல் உடன் ஒப்பிட்டு பேசியவர்களுக்கு பதிலடியும் கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது வம்சி அடுத்து எந்த புது படத்திலும் கமிட் ஆகாமல் தான் இருக்கிறார். வாரிசு படம் தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவராததால் அவருக்கு அடுத்து வாய்ப்பு கொடுக்க முன்னணி ஹீரோக்கள் தயங்குவதாக சினிமா துறையில் பேச்சு இருக்கிறது.
பல நடிகர்களுக்கு வம்சி கதை கூறி வந்தாலும் எதுவும் இன்னும் ஓகே ஆகாமல் தான் இருக்கிறதாம். விஜய்யை வைத்து படம் எடுத்தவருக்கா இந்த நிலைமை என நெட்டிசன்களும் பேசி வருகின்றனர்.
அது உண்மைனு நம்பிடீங்களா.. ட்விஸ்ட் வைத்த நடிகை குஷ்பு

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
