எல்லோருக்கும் பிடிக்கணும்னு அவசியமே இல்லை.. வாரிசு ஹீரோயின் ராஷ்மிகா
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகாவுக்கு தென்னிந்திய சினிமாவில் மிக அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். புஷ்பா படத்திற்கு பிறகு அவருக்கு மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். அவரை நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அவர் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருக்கும் அவர் அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவரை பற்றிய ட்ரோல்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து தன்னை ட்ரோல் செய்பவர்கள் பற்றி ராஷ்மிகா தற்போது பேசி இருக்கிறார்.

ட்ரோல்களுக்கு பதிலடி
நாங்கள் நடிகர்கள், மக்கள் எல்லோருக்கும் எங்களை பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் வெறுப்பு அதிகமாக தான் இருக்கும். அதே போல இன்னொரு பக்கம் ரசிகர்கள் அன்பும் இருக்கும். எப்படி இருந்தாலும் அவர்கள் எந்த வகையிலாவது என்னை பற்றி பேசுகிறார்கள்.
நான் பேசும் விதம், கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதே நேரத்தில் அதை பிடித்தவர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள், அதற்காக நான் நன்றியுடன் இருப்பேன்.
இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்து இருக்கிறார்.

மக்களை எச்சரித்த தனுஷ் பட இயக்குனர்.. வைரலாகும் ட்வீட்