வாரிசு
விஜய்யின் வாரிசு படம் பாக்ஸ் ஆபிசில் 300 கோடி ரூபாய்க்கு அதிகம் வசூலித்து ஹிட் ஆகி இருக்கிறது. வசூல் விவரத்தை தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் ஓடிடியில் வாரிசு படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது. அதற்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
விஜய் பேச்சு
இந்நிலையில் வாரிசு பற்றி பேசி இருக்கும் விஜய், 'இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். படம் மொத்தமாக பணக்கார backdrop இருந்தாலும், கதையின் மையக்கரு எமோஷன்கள் மற்றும் குடும்பம் பற்றியதாக மட்டும் தான் இருந்தது தான்" என கூறி இருக்கிறார்.
விஜய் தற்போது அவரது அடுத்த படமான லியோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாத்தி படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு.. ஆசிரியர்கள் கடும் கண்டனம்