வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள நடிகர்கள் - நடிகைகளின் குரூப் போட்டோ ! யார் யார் பாருங்க
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஏதும் வெளியாகவில்லை.
மேலும் இந்த வாரம் வாரிசு படத்தின் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஷாயம், கிரிஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இயக்குநர் வம்சி எடுத்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த புகைப்படத்தில் நடிகைகள் மீனா, சினேகா, சங்கீதா, சங்காவி உள்ளிட்டோரும் உள்ளனர். மேலும் இப்படத்தில் அந்த நடிகைகளும் நடித்துள்ளார்களா என்பது அதிகாரபூர்வமாக தெரியவில்லை.
அதிரடியாக வெளியான விஜய்யின் வாரிசு பட புதிய புகைப்படங்கள்