வாரிசு படத்தின் சென்சார் சான்றிதழ்.. யு வா? யு/ஏ வா?
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் வாரிசு ட்ரைலருக்காக தான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அதன்படி, இப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
சென்சர் சான்றிதழ்
இந்நிலையில், வாரிசு படம் இன்று சென்சார் செய்யப்பட்டு இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வாரிசு படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என்றும் தெரியவந்துள்ளது.
நேற்று சென்சார் ஆன துணிவு திரைப்படம் யு/ஏ சான்றிதழை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக இந்த பொங்கல் க்ளாஷ் மிகப்பெரிய அளவில் இருக்கப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..
நடிகை ராதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்