வாரிசு
விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த இரு பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து மூன்றாவது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் வருகிற 24ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வாரிசு கிளைமாக்ஸ்
இந்நிலையில், இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த திலிப் சுப்ராயன் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார்.

வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பயங்கரமாக இருப்பதாகவும் செம மாஸ் காட்சி வந்திருக்கு என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். திலிப் சுப்ராயன் இப்படி கூறியுள்ளது படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.