ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை அள்ளும் வாரிசு.. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் புதிய சாதனை
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட மற்றும்பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.
புதிய சாதனை
இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 10 கோடிக்கு விற்றுப்போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே விஜய்யின் திரைவாழ்க்கையில் தி பெஸ்ட் ஆடியோ பிஸ்னஸ் என்று கூறப்படுகிறது.
ரிலீசுக்கு முன்பே வாரிசு திரைப்படம் பல கோடிகளை பிஸ்னஸ் மூலம் வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.