அனைவரும் எதிர்பார்க்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள்! எப்போது ரிலீஸ் தெரியுமா?
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்பட காட்சியின் புகைப்படங்கள் அல்லது வீடியோ இணையத்தில் கசிந்து வந்தது. இதனால் படக்குழுவினர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர்.
பர்ஸ்ட் சிங்கிள்
இதற்கிடையே தற்போது வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி வாரிசு படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா எதுவும் நடக்காத நிலையில் வாரிசு படத்திற்கு எப்போதும் போல விஜய் படத்திற்கு நடக்கும் எல்லா விஷயங்களும் நடக்கும் என சொல்லப்படுகிறது.
அர்ச்சனாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து இந்த பிரபலமும் விலகுகிறாரா

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
