வாரிசு படம் படும் தோல்வியா?.. தில் ராஜு சொன்ன விஷயத்தை பாருங்க
வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11 -ம் தேதி வெளியானது வாரிசு திரைப்படம்.
இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் எனப் பல நட்சித்திர பட்டாளமே இருந்தது. வாரிசு படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழு அறிவித்து இருந்தது.
நஷ்டமா
சமீபத்தில் பேசிய வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, ஆந்திரா பிரதேஷ் மற்றும் தெலுங்கானாவில் நாங்கள் விநியோகம் செய்த Masooda, Bimbisara, ஜெயிலர், அனிமல், லவ் டுடே, பொன்னியின் செல்வன், தசரா ஆகிய படங்கள் நல்ல லாபத்தை கொடுத்தது என்று கூறியுள்ளார்.
இதில் லாபம் கொடுத்த படங்கள் வரிசையில் வாரிசு படத்தை தில் ராஜு குறிப்பிடவில்லை.. இதனால் வாரிசு படம் நஷ்டத்தை கொடுத்துவிட்டது என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.