30 நொடி பாட்டும் இணையத்தில் மொத்தமாக லீக்! தொடரும் வாரிசு திரைப்படத்தின் சர்ச்சை
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
விஜய்யுடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதனிடையே விசாகப்பட்டினத்தில் நடந்து வந்த ஷூட்டிங் நேற்றுடன் முடிந்துள்ளது, அதனை முடித்துவிட்டு தளபதி விஜய் சென்னைக்கு திரும்பினார்.

தொடரும் லீக்ஸ்
இந்நிலையில் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடக்கத்தில் இருந்ததே அப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் செய்யப்பட்டு வருகிறது. அது படக்குழுவுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி தான்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு விஜய் - ராஷ்மிகாவின் புகைப்படம் கசிந்து செம வைரலானது. ஆனால் தற்போது அந்த பாடலின் 30 நொடி வீடியோவே லீக் செய்துள்ளனர்.
தொடர்ந்து இப்படி நடப்பது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சந்திரமுகி பட புகழ் பொம்மிக்கு திருமணமாகி குழந்தையே பிறந்துவிட்டதா