வாரிசு
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்குரிய படங்களில் ஒன்றாக வாரிசு இருக்கிறது. விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார்.
தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் கூறிய குட்டி கதை மற்றும் சில விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
ட்ரைலர் அப்டேட்
இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து ரசிகர்கள் அடுத்த அப்டேட்டுக்கு தயாராகிவிட்டனர். இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி வருகிற 31ஆம் தேதி மாலை 6மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri