2023 பொங்கல் வின்னர் வாரிசு-ஆ அல்லது துணிவு-வா! உண்மையான தகவல் இதுதான்
வாரிசு - துணிவு
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் வெளிவந்தது.
இதில் முதல் நாள் விமர்சன ரீதியாக பின்தங்கிய வாரிசு திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு வாசோலை வாரிக்குவித்தது.

ஆனால், துணிவு முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்து திரையரங்கில் ஓடி முடிந்துவிட்டாலும், இந்த இரு படங்களில் யார் ரியல் பொங்கல் வின்னர் என்பதை இன்று வரை ரசிகர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.
ரியல் பொங்கல் வின்னர் யார்
இந்நிலையில், வாரிசு திரைப்படம் உலகளவில் ரூ. 290 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதே போல் துணிவு திரைப்படம் ரூ. 210 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இதில் வாரிசு தமிழ்நாட்டில் நஷ்டத்தை சந்திக்காமல் தப்பித்தது. மேலும் மலேசியா, UK மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் சூப்பர்ஹிட்டானது. அதை தவிர்த்து மற்ற இடங்களில் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

ஆனால், துணிவு ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடங்களை தவிர்த்து ரிலீசான அனைத்து இடங்களிலும் லாபத்தை கொடுத்தது. இதை வைத்து மக்கள் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் உண்மையான பொங்கல் வின்னர் யார் என்று.
டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri