விஜய்யின் வாரிசு கலெக்ஷன் குறித்து பொய் சொல்லும் தில் ராஜு- உண்மையில் நஷ்டமா, பிரபலம் கூறிய தகவல்
விஜய்யின் வாரிசு
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை புரட்டிபோட வந்த படங்கள் துணிவு மற்றும் வாரிசு. ஆனால் இந்த இரண்டு படங்களுமே சாதாரண வசூலை தான் பெற்றன, பெரிய அளவில் கலெக்ஷன் என இல்லை.
வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு வாரா வாரம் படம் செம வசூல் என பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளார். அவர் கூறும் வசூல் விவரம் எல்லாம் பொய்யானதாம்.
சித்ரா லக்ஷமனன்
பிரபலம் சித்ரா லக்ஷ்மன் நிறைய பிரபலங்களை பேட்டி எடுப்பது, வசூல் குறித்து பேசுவது என வழக்கமாக செய்து வருகிறார்.
அண்மையில் விஜய்யின் வாரிசு கலெக்ஷன் குறித்து பேசும்போது. மாஸ்டர் படத்தை விட 25 குறைவாக தான் வாரிசு வசூல் செய்துள்ளதாம்.
ஹிந்தியில் படம் எப்படி வசூல் செய்தது எனக்கு தெரியவில்லை, ஆனால் தெலுங்கில் மாஸ்டர் எவ்வளவு வசூலித்ததோ அதைவிட குறைவாக தான் வாரிசு அங்கு கலெக்ஷன் பெற்றிருப்பதாக அந்த சினிமா துறை தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.
வசூலை ஏன் தில் ராஜு மாற்றி கூறுகிறார் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தாராம். ஆனால் ஓரளவிற்கு படம் நல்ல வசூல் தான் என பிரபலம் சித்ரா லக்ஷமனன் தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
