திடீரென மாற்றப்பட்ட வாரிசு திரைப்படத்தின் ரீலிஸ் தேதி! மோதலுக்கு ரெடியாக இருக்கும் துணிவு
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் இப்போது இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாரிசு திரைப்படம் மட்டும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

மாற்றப்பட்ட தேதி
இதனிடையே இரண்டு திரைப்படங்களும் ஒரே நாட்களில் வெளியாகாமல் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி துணிவு திரைப்படம் 12 ஆம் தேதியும், வாரிசு திரைப்படம் 13 ஆம் தேதியும் வெளியாகும் என தகவல் வெளியானது.
மேலும் தற்போது வாரிசு திரைப்படத்தை துணிவு திரைப்படத்திற்கு முன்பே, அதவாது வாரிசு திரைப்படம் புதன்கிழமை 11 ஆம் தேதி வெளியாகும் என முக்கிய சினிமா பிரமுகர் தெரிவித்து இருக்கிறார்.

நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா