வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியான அதிரடி தகவல்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வாரிசு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்துடன், அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அந்த இரண்டு திரைப்படங்களை எதிர்பார்த்து இருக்கின்றது. ஏற்கனவே வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் செவ வைரல் ஹிட்டாகி இருக்கிறது. யூடியூப்-ல் தற்போது வரை 60 மில்லியன் பார்வைகளுக்கு மேல் அப்பாடல் குவித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி இப்படத்தின் இசைவெளியிட்டு விழா நடக்கும் என சொல்லப்படுகிறது.
ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. எப்படி இருக்கிறார் பாருங்க